Saturday, April 05, 2008

காசி...வாரணாசி..

இந்துக்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது போக விரும்பும் ஸ்தலம்.


முதலில் நம்மைப் பெற்றவர்களை ஒரு முறையேனும் அழைத்துப் போகலாம் அல்லது அனுப்பி வைக்கலாம்.

கோயிலில், கடைகளில், தங்கும் இடத்தில் என எங்கேயும் தமிழ் பேசுபவர்கள் காசியில் இருக்கிறார்கள்.

எவ்வளவோ செலவு செய்கிறோம் நாம்.

காசி மட்டும் என்றால் 4 ஆயிரம் மட்டும் போதும்.

காசி, அலகாபாத்,கயா,அயோத்தியா,மதுரா,ஆக்ரா,ரிஷிகேஷ், ஹரித்வார் எனில் ஒருவருக்கு 9 ஆயிரம் ஆகும்.
14 நாள்கள் சாப்பாடு, தங்கும் இடம், ட்ரெய்ன் என அனைத்தும் சேர்ந்து இந்தத் தொகை வரும்.

நமக்கும் ஒரு திருப்தி. அவர்களுக்கும் திருப்தி.
அவர்கள் கேட்க மாட்டார்கள், நாம் தான் அனுப்பி வைக்க வேண்டும். அம்மா, அப்பா நிஜமாய் சந்தோஷம் அடைவார்கள்.

கேட்டு பாருங்கள், அனுப்பி பாருங்கள்...
உணர்வீர்கள் சந்தோஷம் என்பது என்ன என்று?

எத்தனையோ தனியார் ட்ராவல்ஸ் மாதம் மாதம் அழைத்துப் போகிறார்கள்.

2 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லது சொல்றீங்க.. தமிழ்மணத்துக்கு நல்வரவு.. வாழ்த்துக்கள்.

( வேர்டு வெரிபிகேஷன் மட்டும் எடுத்துடுங்க.. பெரிய தொல்லை.. தமிழில் அடித்துக்கொண்டிருந்துவிட்டு ஆங்கிலத்துக்கு மாறி என்று ..)

அமுதா கிருஷ்ணா said...

எடுத்து விட்டேன் முத்து madam..ஆதரவுக்கு நன்றிகள்.