Monday, April 07, 2008

இளம் மருத்துவர்களை பாடாய் படுத்தும் ....

ஏற்கனவே ஏன் இந்த படிப்பில் சேர்ந்தோம் என்று தவிக்கும் மருத்துவ மாணவர்கள் இப்பொழுது நொந்துப் போய் இருக்கிறார்கள்.
முப்பது வயது ஆகப் போகிறது இன்னும் செட்டில் ஆகவில்லை நிறைய முதுகலை மருத்துவர்கள்.
இவர்கள் செய்த குற்றம் நன்குப் படித்து மாநிலத்தில் முதல் பத்து இடங்களுக்குள் வந்ததே.
பதினைந்தாயிரம் சம்பளத்தில் மூன்று வருடம் வேலைப் பார்ப்பேன் என்று எழுதிக் கேட்கிறது அரசு. இல்லையெனில் மூன்று லட்சம் பணம் கட்டச் சொல்கிறது. பாதி பேர் மத்திய வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்.

பள்ளி இறுதி முடித்தவர்கள் இன்று கால் சென்டரில் வாங்கும் சம்பளம் இது. அதன் பின்னால் எட்டில் இருந்து பத்து வருடங்கள் படிக்கும் இவர்களுக்கும் இந்த தொகையா??

ஐ.ஐ.டி யில் முடிக்கும் மாணவர்களுக்கு இப்படி கண்டிஷன் உண்டா? யாரும் இனிமேல் மருத்துவம் படிக்க வேண்டாம் என்று முடிவு செய்யப் போகிறார்கள்.

4 comments:

Santhosh said...

ஒ இப்ப இது வேறயா? ரொம்ப கஷ்டம் தான் அப்ப.

Can you remove the word verification in your comment?

நிஜமா நல்லவன் said...

login
customize
settings
comments
Show word verification for comments? Yes No


இங்க கொஞ்சம் நோ கிளிக் பண்ணுங்க. இதெல்லாம் உங்களுக்கே தெரிஞ்சிருக்கும். இருந்தாலும் இந்த பக்கம் வந்ததுக்கு ஏதாவது சொல்லணுமே அதான்:)

Anonymous said...

நல்ல வேளை, நான் தப்பிச்சேன். வூட்ல ரொம்ப படுத்தினாங்க.... 'டாக்டராயிடு எப்டியாவது'ன்னு............ நானாவது படிக்கிறதாவது.....

ரொம்ப சந்தோஷம்.

கடுகு

அமுதா கிருஷ்ணா said...

"இங்க கொஞ்சம் நோ கிளிக் பண்ணுங்க. இதெல்லாம் உங்களுக்கே தெரிஞ்சிருக்கும். இருந்தாலும் இந்த பக்கம் வந்ததுக்கு ஏதாவது சொல்லணுமே அதான்:)"

thanks .. நிஜமா நல்லவன் சார்..இப்பதான் நீங்க சொன்னதை மாத்தினேன்.