Tuesday, March 09, 2010

வருடங்கள் கழித்து போன காலேஜ்!!

நேற்று என் மகன் நகுல் காலேஜில் இருந்து மதியம் வரும் போதே ஒரே டென்ஷனாய் வந்தான். நாளைக்கு என் H.O.D உங்களை காலேஜ் கூட்டி வர சொல்லி இருக்கிறார்மா.அட்டெண்டன்ஸ் 15 நாள் குறையுது இது வரை இப்படி ஆனது இல்லை என்பதால் தன்னை மட்டும் அம்மாவை கூட்டி வர சொன்னதாய் ஒரே புலம்பல். எனக்கு தெரிந்து 8 நாட்கள் தான் இந்த செமஸ்டரில் லீவு எடுத்து இருந்தான். என்க்கு தெரியாமல் லீவே போட்டது இல்லை. காலேஜ் கட் செய்து சினிமா போனாக்கூட என்னிடம் போனில் சொல்லி விடுவான்.எனவே, நான் காலேஜ் வர சங்கடப்படுவேனோ, அவனை தப்பாய் புரிந்துக் கொள்வேனோ என்று ஒரே டென்ஷன் அவனுக்கு. நான் ரொம்ப கூலாய் காலேஜ் நீ சேர்ந்த போது வந்தது. நல்லதாய் போச்சு இப்ப ஒரு சான்ஸ் உங்க தாம்பரம் MCC க்கு இனிமேல் எப்ப போக முடியும் அதனால் நான் வரேண்டா என்று கூலாக சொல்லிவிட்டேன்.

காலேஜிற்கு இன்று காலையில் அவனுடன் போய் அவன் ஆசிரியரை சந்தித்து வந்தேன். நன்கு படிக்கும் பையன் இத்தனை நாட்கள் லீவ் எடுத்தது பெற்றவர்களுக்கு தெரிவிக்கவே இப்படி அழைத்து வர சொன்னோம் என்று அவர் கூறினார். நானும் இல்லை இவன் எனக்கு தெரியாமல் லீவு எடுத்தது கிடையாது. வேறு ஏதோ பிரச்சனை ஆகி உள்ளது என்று சொல்லிட்டு மார்ச் 19 அவனுக்கு ஒரு நாள் லீவு தேவை உள்ளது என்று அவரிடம் அப்படியே சொல்லி விட்டேன். அப்புறம் அவன் ஃப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்து கேண்டின் போய் ஒர் வெட்டு வெட்டிட்டு க்ளாஸ் ரூமெல்லாம் சுத்தி பார்த்துட்டு. காடு போல் உள்ள அந்த காலேஜுக்குள் வெயிலே தெரியாத அந்த சூழ்நிலையை அனுபவித்து விட்டு, ஏண்டா மூன்று வருடம் படிக்கிறே மூன்றே மூன்று கேர்ள்ஸ் தான் ஃப்ரெண்ட்ஸா என்று அதட்டிவிட்டு வந்து விட்டேன்.

4 comments:

மங்குனி அமைச்சர் said...

//என்க்கு தெரியாமல் லீவே போட்டது இல்லை.//

ஆனாலும் நீங்க எவ்வளவு நல்லவுங்க ?
எல்லாத்தையும் நம்பிடுரிங்க

//காலேஜ் கட் செய்து சினிமா போனாக்கூட என்னிடம் போனில் சொல்லி விடுவான்//

அது பாய் பிரண்ட்சோட போனா மட்டும்தான், கேர்ள் பிரெண்டோட போன ????????

//மூன்றே மூன்று கேர்ள்ஸ் தான் ஃப்ரெண்ட்ஸா என்று அதட்டிவிட்டு வந்து விட்டேன்//

அந்த மூணு பேறும் பிரண்ட்ஸ் மட்டும்தான்? அப்ப ............? யோசிங்க மேடம்

டிஸ்கி: டீச்சர் டமில் டு இங்கிலீஸ் டைபிங் ரொம்ப கஷ்டமா இருக்கு , அதுனால மிஸ்டேக் இருந்தா மார்க்க குரசிறாதிங்க

அமுதா கிருஷ்ணா said...

மங்குனி அமைச்சரே,,என் பையனை பற்றி எனக்கு தான் முழுமையாக தெரியும்..நம்பிக்கைதான் வாழ்க்கை..சைக்காலஜி தெரிந்து வளர்த்தால் எந்த் பிள்ளையும் நல்ல பிள்ளைதான்..அனாவசிய ஏமாற்றங்கள் இருக்காது. பொய் சொல்ல என்ன அவசியம்..நான் லவ்விற்கு எதிரியல்ல..என் பையன்கள் எதுவானாலும் என்னிடம் சொல்ற மாதிரி வளர்த்து இருக்கிறேன்.அவன் ஃப்ரெண்ட்ஸ்கள் அனைவரும் அதை பார்த்து பொறாமை படுவார்கள்..

பத்மா said...

ரொம்ப இன்ரஸ்டிங்கா இருக்கு உங்க வலைபூ .

CS. Mohan Kumar said...

ஆஹா MCC-யில் படிக்கிறானா உங்க பையன்; குடுத்து வச்சவன்; நீங்க எழுதின மாதிரி காடு போல் வெயிலே தெரியாமல் இருக்கும் அற்புத இடம்