Thursday, May 06, 2010

ரிஷி டுமுக்கு ஆனது எப்படி?

என் சின்ன பையன் ரிஷியின் பட்டப் பெயர்கள். அவன் எங்களை படுத்தியபாட்டில் இந்த பெயர்கள் அவனுக்கு கிடைத்தன....

பல்லி: சின்ன பையனாய் இருக்கும் போது எப்பவும் என்னை ஒட்டிக் கொண்டே இருப்பான் பல்லி சுவரில் ஒட்டிக் கொண்டு இருப்பதை போல்.யாராவது தூக்க வந்தால் என்னை விட்டு என்னாலே பிரிக்க முடியாது அவனை.

டைனோசர்: சின்ன டைனோசர் போல் தலையினை ஒரு மாதிரி சாய்த்து கொண்டு வீட்டினுள் வேகமாய் ஓடி வருவான் அதனால் இந்த பெயர்..

நண்டு: எப்பவும் நண்டு மாதிரி ஒரு இடத்தில் இருக்காமல் ஓடிக் கொண்டே இருப்பான். கடக ராசியில் பிறந்தவன்.

நானா படேகர்: ஒரு வயதில் இருந்தே எதுவும் அவனுக்கு நாம் செய்து விட்டால் பிடிக்காது. ஊட்டக் கூடாது..நானா சாப்பிடுறேன் என்பான். பெளடர், சட்டை போட்டு விட்டால் நானா போட்டுகிறேன் என்பான். அவனாக செய்து கொள்வான். எனவே, நானா படேகர் ஆனான்.

டுமுக்கு: ரூமுக்குள் போறேன் என்று சொல்ல வராது. டுமுக்கு போறேன் என்பான். எனவே டுமுக்கு ஆனான்.

இந்த பெயரை எல்லாம் வைத்தது என் தம்பி.பிள்ளையா பிறந்து இருக்கு ஒரு நண்டும் ஒரு தேளும் பிறந்து இருக்கு என்பான். என் பெரிய பையன் விருச்சிக ராசி. சின்னவன் கடக ராசி!!!

ரிஷிகேஷ் என்று தான் சின்னவனுக்கு முதலில் அவனுக்கு பெயர் வைத்து இருந்தோம். அவன் முதல் வகுப்பில் படிக்கும் போது ரிஷிகேசிற்கு போனோம். எங்கு பார்த்தாலும் அந்த பெயரை பார்த்த அவன் ஊர் பெயரை தனக்கு வைத்து இருப்பதாக ஒரே அழுகை. எனவே கேஷை கட் செய்து ரிஷி என்று பெயர் மட்டும் வைத்து விட்டோம்.

டுமுக்கு இப்ப +2 எழுதி உள்ளான்.

1 comment:

Madhu said...

nalla vaikiranga pa perai..