Thursday, June 16, 2011

"வந்து” படும் பாடு

வந்து நான் ஒரு பதிவு போடணும் என்று நினைத்தேன்.எங்க வந்து என்றெல்லாம் கேட்க கூடாது.

என்னுடைய பேட்டி டிவியில் ”வந்தால்” இப்படி தான் இருக்கும்.

சமச்சீர் கல்வி பற்றி:

புதிய அரசு வந்து சமச்சீர் கல்வி வேண்டாம் என்கிறார்கள்.வந்து, போன அரசு அதை செயல்படுத்தியது தான் காரணமா,தெரியலை.வந்து இப்ப வந்து பார்த்தீங்கண்ணா,புதிய அரசு எப்படி சில நாட்களுக்குள் சமச்சீர் கல்வி சரியில்லை என்று கண்டுபிடித்தது? வந்து எல்லா ஸ்டேட்ஸ்லேயும் இரண்டே முறை கல்வி தான் உள்ளது.அது வந்து சி.பி.எஸ்.சி, மற்றும் அந்த அந்த ஸ்டேட் ஃபோர்ட் மட்டும் தான் உள்ளது. வந்து இங்க தமிழ் நாட்டில் மட்டும் தான் வந்து பார்த்தீங்கண்ணா இத்தனை கல்வி முறைகள். எனவே, இது ஒன்றும் இந்தியாவிற்கு புதிய கல்வி முறை இல்லை.

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகள் பற்றி:

உலகத்திலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகள் வந்து ஆப்கானிஸ்தான் தான் இதில் முதல் இடம் வகிக்கிறது. அதன் பிறகு வந்து பார்த்தீங்கன்ணா வந்து காங்கோ வருது லிஸ்ட்ல. மூணாவதா பார்த்தீங்கண்ணா வந்து பாகிஸ்தான் வருது. வந்து மருத்துவ வசதி இல்லாததால் வந்து இங்கு தான் அதிக பெண்கள் வந்து இறக்கிறார்கள்.நான்காவதாக வந்து வருத்தத்துடன் இந்தியா அப்புறமா சோமாலியா.
வந்து பிரசவத்தில் இறப்பு,
வந்து படிப்பறிவு கம்மி,
வந்து கட்டாய திருமணம்,
பெண்கள் பலவந்தமாக கற்பழிக்கப்படுதல்,
குழந்தை உண்டான பெண்கள் சோகைநோயுடன் இருத்தல்,
பெண்கள்,பெண்குழந்தைகள் விபச்சாரத்திற்காக கடத்தப் படுதல்,
18 வயதிற்கு முன்பே திருமணம் செய்வித்தல்,
கருவிலே கொல்லுதல் இப்படி கணக்கெடுத்து தான் இப்படி வந்து ரேங்கிங் செய்து இருக்காங்க.

மூணாறு பற்றி:

2010-ல் ஆசியாவிலேயே மூணாறு தான் இரண்டாவது பெஸ்ட் டூரிஸ்ட் ஸ்பாட்டா செலக்ட் ஆகி இருக்கு.வந்து இங்க பார்த்தீங்கண்ணா மலை முழுவதும் தேயிலை செடிகளாக இருக்கும். 19ஆவது நூற்றாண்டு இறுதியில் தான் இங்கு தேயிலை பயிரிடப்பட்டதாம்.வந்து டோக்கியோ முதல் இடமாம்.வந்து online travel guide TripAdvisor 8 வருடங்களாக தேர்ந்தெடுக்கிறது.


வேறு ஒன்றும் இல்லை. டிவியில் யாரேனும் நம் தமிழ்க்காரங்க பேட்டி கொடுத்தாங்கண்ணா இப்படி வந்து வந்து என்று அடிக்கடி சொல்றோம். வந்து ஒரு பாயிண்ட் சொல்லும் போது அடுத்த பாயிண்டை யோசிக்க இந்த வந்துவை உபயோகப்படுத்துகிறோம் போல.

8 comments:

வெங்கட் நாகராஜ் said...

வந்து, நானும் என்னமோ கமெண்ட் போட வந்தேன்... என்னமோ போங்க... வந்து நியாபகம் வந்தா சொல்றேன்... :))))

செங்கோவி said...

வந்து-வை வச்சு லந்து கொடுத்திருக்கீங்களே..அது வந்து..பதிவு நல்லா வந்திருக்கு.

ஹுஸைனம்மா said...

//இந்த வந்துவை உபயோகப்படுத்துகிறோம் //

ஏதோ ஜந்துவைப் பயன்படுத்துவதுபோலச் சாதாரணமாச் சொல்லிருக்கீங்களே!! :-)))

ஸ்வர்ணரேக்கா said...

க படும் பாடு
வந்து படும் பாடு...

--- இன்னும் என்னல்லாம் வரப்போகுதோ..?

ADHI VENKAT said...

வந்து பேட்டி நல்லா வந்து இருக்குங்க. ஆனா வந்து வந்து …………..

A.R.ராஜகோபாலன் said...

வந்து வந்த விதம் பற்றி
வந்து பதிவு போட்டு- எங்களை
வந்து
வந்து பாக்க வச்சி- அந்த
வந்(து)த படிக்க வச்சிடிங்க
பகிர்வுக்கு நன்றி சகோதரி

உங்க தம்பி பையன் என்ன பண்ணுறார்

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

இந்த "வந்து" "அப்புறம்" "சும்மா" எல்லாம் வந்துட்டே இருக்கும் பேசறப்ப... ரெம்ப நகைச்சுவையா அதே நேரம் விசயமும் சொல்லி இருக்கீங்க... நீங்க சொன்ன ஒரு பாயிண்ட் ரெம்ப சரி... பெரும்பாலும் அடுத்து என்ன சொல்லணும்னு யோசிக்கரப்ப தான் இதெல்லாம் வரும்... ஆங்கிலத்துல கூட இப்படி இருக்கு "like" "because" "so" "just" அந்த மாதிரி... நானும் இந்த likeஐ விடணும்னு படாதபாடு படறேன்... ஆனா வந்து அது வந்து வந்துட்டே இருக்கு போங்க..:))

pudugaithendral said...

:))